திரிபுவன சக்கரவர்த்தியின் மனைவியான தியாகவல்லி என்னும் அரசகுமாரி பூசை செய்ததால் தியாவல்லி என்றும் பெயர் உண்டானது. இருவரின் உருவரும் வடக்கு பிரகாரத்தில் உள்ளன. அகத்தியர் பூசை செய்த தலம். காகபுஜண்ட மகரிஷி இங்கு வந்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இத்தலம் மணலால் மூடப்பட்டு இருந்தது என்றும், சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த 'மதுரை இராமலிங்க சிவயோகி' என்னும் தம்பிரான் இக்கோயிலைக் கண்டுபிடித்து திருப்பணி செய்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இக்கோயிலுக்கு 'தம்பிரான் கண்ட கோயில்' என்னும் பெயரும் உண்டு.
மூலவர் சிறிய லிங்கத் திருமேனி. சதுர ஆவுடையார். மேற்கு பார்த்த சன்னதி. அம்பிகை சுமார் 5 அடி உயரம் கொண்டு நமக்கு அருள்பாலிக்கின்றாள். இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : 94425 85845. |